மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 4000 பேர் வேலை இழக்கும் அபாயம்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய மறுசிரமைப்பு நடவடிக்கையால் சுமார் 4000 பேர் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் உற்பத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். இதுதவிர தகவல் தொழல்நுட்பம் சார்ந்த பல்வேறு துணை தொழல்களையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது.

இந்நிறுவனத்தில் சுமார் 1,92,000 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 71,000 பேர் அமெரிக்காவிலும், 1,21,000 பேர் மற்ற நாடுகளிலும் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் வாடிக்கையாளர் மற்றும் பங்குதாரர்கள் சேவையை மேம்படுத்துவதகாக சில மாற்றங்கள் மேற்கொள்ளபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் பிறந்த சத்யா நாதெல்லா தலைமையிலான தொழில் நுட்ப நிறுவனம் சுமார் 3,000 முதல் 4,000 பணியாளர்களை குறைக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளது. இதில் அமெரிக்காவிற்கு வெளியே வேலை செய்பவர்களே அதிகமாக வேலை இழக்க உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த தகவல் மைக்ரோடாப்ர்ட் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரால் கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆள்குறைப்பு நடவடிக்கையால் வெளிநாடுகளில் இருந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வேலை செய்து வருபவர்கள் வேலை இழக்க அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்தியாவை சேர்ந்தவர்களே அதிக அளவில் வேலை இழக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !