Main Menu

மே 13 ஆம் திகதி வரை இதே அரசாங்கம் தொடரும் – ஊடக பேச்சாளர் அறிவிப்பு

வரும் 13 ஆம் திகதி வரை Jean Castex தலைமையிலான இதே அரசாங்கமே தொடரும் என ஊடக பேச்சாளர் Gabriel Attal தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் (conseil des ministres) நிறைவில் Gabriel Attal இதனை தெரிவித்தார். வரும் மே 13 ஆம் திகதி அன்று ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் பதவியேற்பு விழா இடம்பெற உள்ளது. அதையடுத்து அன்றைய இரவு வரை இதே அரசாங்கமே தொடரும் என Gabriel Attal குறிப்பிட்டார்.

ஆனால் புதிய பிரதமரை அறிவிக்கும் திகதி குறித்து துல்லியமான தகவல்களை அவர் வெளியிடவில்லை. அதேவேளை, புதிய பிரதமர் பதவிக்கு இதுவரை எவரது பெயரும் ஆலோசிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக “ஜனாதிபதி தேர்தலில் மக்ரோன் வெற்றி பெற்றல் நான் பதவி விலகுவேன்” என Jean Castex அறிவித்திருந்த போதும், வரும் பாராளுமன்ற தேர்தல் வரை அவரால் பிரதமராக பதவிவகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.