மே தினக் கூட்டத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பலம் நிரூபிக்கப்படும் – மஹிந்த ராஜபக்ஸ

மே தினக் கூட்டத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பலம் நிரூபிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். காலி முகத் திடலில் கூட்டு எதிர்க்கட்சி மே தினக் கூட்டத்தை நடாத்த உள்ள நிலையில் காலி முகத் திடலில் கூட்டத்தை நடாத்த சந்தர்ப்பம் வழங்கியமைக்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தள்ளார்.

இந்த மே தினக் கூட்டம் வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாக அமையும் என குறிப்பிட்டுள்ள அவர் நல்லாட்சி அரசாங்கம் மீது  மக்களுக்கு நம்பிக்கை முழுவதுமாக நீர்த்துப் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த மே தினக் கூட்டத்தில் அரசாங்கத்திற்கான நன்மதிப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !