மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரை பங்களாதேஸ் கைப்பற்றியது

மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணியை அணியை 18 ஓட்ட வித்தியாசத்தில் வென்று பங்களாதேஸ் அணி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது . மேற்கிந்தியதீவுகள் மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்றையதினம் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்று பங்களாதேஸ் அணி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது

நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதனையடுத்து 302 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியதீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 283 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வயடைந்த நிலையில் பங்களாதேஸ் அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !