மேகன் மார்க்கெல் அணிந்திருந்த ஆடைகள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளது

இளவரசர் ஹரியுடன் இணைந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மேகன் மார்க்கெல் அணிந்திருந்த ஆடைகள் தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியா இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கெல் அரசகுடும்ப சுற்றுப்பயணமாக அவுஸ்ரேலியா, பிஜி, டானோ மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு 16 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தங்களுடைய பயணத்தை ஆரம்பித்த போது, மேகன் மார்க்கெல் கர்ப்பமாகவுள்ளார் என்ற தகவலை கெங்ஸ்டன் அரண்மனை வெளியிட்டது.

இந்நிலையில் இந்த 16 நாட்கள் சுற்றுப்பயணத்தின் போது இளவரசி மேகன் மார்க்கெல் 30 இற்கும் மேற்பட்ட ஆடைகளை மாற்றியுள்ளதாகவும், ஆடை மற்றும் அவர் அணிந்திருந்த அணிகலன்களின் மதிப்பு 130,107.50 பவுண்ட் எனவும் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதில், அவுஸ்ரேலியாவின் சிட்னி மாநகரில் இடம்பெற்ற Geographical Society விருது வழங்கும் விழாவில், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான  Oscar de la Renta என்ற உடையை அணிந்திருந்தார்.

அதன் மதிப்பு 10,000 பவுண்ட் எனவும், பிஜிக்கு சென்ற போது அங்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு சாபியா என்றழைக்கப்படும் நீலநிறத்திலான உடை அணிந்திருந்தார். அதன் மதிப்பு 1,095 பவுண்ட் எனவும் கூறப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து Tonga நாட்டிற்கு சென்ற போது அங்கு நீளமான வெள்ளை நிற theia என்றழைக்கப்படும் உடை அணிந்திருந்தார். இதனுடைய மதிப்பு 780 பவுண்ட் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கோட் வடிவ ஆடை அணிந்திருந்தார். அதன் மதிப்பு 1,450 பவுண்ட் எனவும், அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அரச மாளிகையில் இடம்பெற்ற விழா ஒன்றில் அணிந்திருந்த ஆடையின் மதிப்பு 1,950 பவுண்ட் எனவும் குறிப்பிடப்படுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !