மெட்ரோவிற்குள் பாலியற் சேட்டைகள் – பங்களாதேஸ் நபர் கைது

30 வயதுடைய பங்களாதேசைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு நபர், கைது செய்யப்பட்டு, இன்று பரிசின் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளார்.

பரிசில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் இவன், மிகவும் சனத்திரள் கூடியநேரத்தில், மெட்ரோ அணி 5 இனுள், 12 முதல் 14 வயதுச் சிறுமிகளிடம் பாலியல் தொடுகைகள், மற்றும் மோசமான செயல்களைப் புரிந்து வந்துள்ளான்.

République  இற்கும் Gare-de-l’Est  இற்கும் இடையில் மெட்ரோவினுள் இவன் இந்தக் குற்றங்களைத் தொடர்ச்சியாகச் செய்து வந்துள்ளான்.

பல சிறுமிகளின் முறைப்பாடுகளையும், சாட்சியங்களையும் கேட்ட காவற்துறையினர், கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள் மூலம் இந்தக் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர்.

தொடர் குற்றவாளியான இவனிற்குப் பலத்த தண்டனை வழங்கவேண்டும் என அரசாங்கத் தரப்பு சட்டவல்லுநர் கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !