Main Menu

மெட்டா நிறுவனத்தில் 3,600 ஊழியர்கள் பணிநீக்கம்,?

மெட்டா நிறுவனத்தின் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மார்க் சக்கர்பர்க் முடிவு செய்துள்ளார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் நிறுவனங்களை சொந்தமாகக் கொண்ட மெட்டா நிறுவனம், குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களை பணி நீக்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிறகு, அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாத நிலவரப்படி, மெட்டாவில் அன்னளவாக 72,000 ஊழியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பகிரவும்...
0Shares