Main Menu

மூன்று வாரத்துக்கு பிறகு பிரான்ஸில் குறைந்த கொவிட்-19 பாதிப்பு!

பிரான்ஸில் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று, மூன்று வாரத்துக்கு பிறகு குறைவான எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் பிரான்ஸில் கொவிட்-19 பெருந் தொற்றினால், 493பேர் பாதிக்கப்பட்டதோடு, 19பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 20ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில் இதுவரை இரண்டு இலட்சத்து 19ஆயிரத்து 29பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30ஆயிரத்து 429பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை ஒரு இலட்சத்து நான்காயிரத்து 535பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 384பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன், இதுவரை 84ஆயிரத்து 65பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.