Main Menu

மூன்று வயது முதல் சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி!

பிரான்ஸில் மூன்று வயது முதல் சிறுவர்களுக்கு கட்டாய கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இவ்வாறு கட்டாய கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1882ஆம் ஆண்டிலிருந்து பிரான்ஸில் சிறுவர்களுக்கு ஆறு வயதிலிருந்தே கல்வி கட்டாயம் ஆகும்.

எனினும் நேற்று முதல் அது மூன்று வயதாக குறைக்கப்பட்டுள்ளது. தங்கள் 3 வயது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் தங்களுடன் வைத்திருக்க விரும்பும் பெற்றோர், அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.