Main Menu

மூன்று மாதங்களின் பின்னர் – ஓர்லி விமான நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் புறப்பட்டது

கிட்டத்தட்ட மூன்று மாதங்களின் பின்னர், ஒர்லி விமான நிலையம் இன்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.  இன்று வெள்ளிக்கிழமை காலை 6:25 மணிக்கு ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் புறப்பட்டது.  படிப்படியாக ஆரம்பிக்கும் இந்த விமான சேவைகளில், முதல்கட்டமாக Air Caraïbes, Air Corsica, Air France, Amelia, Corsair, French Bee, Transavia மற்றும் Wizzair ஆகிய எட்டு நிறுவனங்கள் சேவைகள் ஆரம்பித்துள்ளன.  நாள் ஒன்றுக்கு 600 விமானங்கள் வரை இயங்கும் இந்த விமான நிலையில், முதல்கட்டமாக நாள் ஒன்றுக்கு  70 விமானங்கள் இயங்க உள்ளன.