மூன்று பிரதான தொழிற்சங்க பணிப் பகிஷ்கரிப்பால் பெல்ஜியம் விமான சேவைகள் ரத்து!

பெல்ஜியத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய தொழிற்சங்க பணிப் பகிஷ்கரிப்பால் நாட்டிற்கு உள்வரும், வௌிச் செல்லும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணி (21:00 GMT) தொடக்கம் 24 மணித்தியாலங்களுக்கு பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெறுகிறது.

மூன்று பிரதான தொழிற்சங்க சம்மேளனங்களால் இந்த தேசிய ரீதியான பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக பெல்ஜியம் விமான சேவை கட்டுப்பாட்டகம் தெரிவித்துள்ளது.

இந்த போராட்டத்தில் ஈடுபடும் முக்கிய விமான சேவை ஊழியர்களின் எண்ணிக்கையைப் பற்றி உறுதியாக தெரியவில்லை என்று விமான சேவை முகவரகமான ஸ்கேயஸ் கூறுகின்றது. விமானப் போக்குவரத்தை அனுமதிக்காமல் இருப்பதே இதற்கு ஒரே வழி என்று அந்த முகவரகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதி செய்வது தமது பொறுப்பு என்றும், விமான சேவை நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சில முக்கிய பதவிகள் மீதான முறுகல் நிலை குறித்து தமக்கு பொறுப்பு கூற முடியாது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !