மூக்கால் உறிஞ்சும் கொரோனா தடுப்பு மருந்து
கொரோனா வைரசுகள் அடிக்கடி உருமாறி வீரிய சக்தியை பெறுவதால் அவற்றை சில தடுப்பு மருந்துகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
கொரோனாவை முன் கூட்டியே தடுப்பதற்காக பல்வேறு தடுப்பூசி மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் இதுவரை 2 தடுப்பூசி மருந்துகளை உருவாக்கி இருக்கிறது.
இந்தநிலையில் சீனா மூக்கினால் உறிஞ்சும் தடுப்பு மருந்தை உருவாக்கி இருக்கிறது. சீனாவில் உள்ள கேன்சினோ பயாலஜிக்கல் நிறுவனம் இதை தயாரித்துள்ளது.
இதுபற்றிய ஆய்வுகளை பல கட்டங்களாக நடத்தியது. அதில் இந்த மருந்து சிறப்பாக செயல்படுவதாக சீனா அறிவித்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் தயாரித்துள்ள சில தடுப்பூசிகள் சரியாக வேலை செய்யவில்லை.
கொரோனா வைரசுகள் அடிக்கடி உருமாறி வீரிய சக்தியை பெறுவதால் அவற்றை சில தடுப்பு மருந்துகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் சீனா தயாரித்துள்ள இந்த மருந்து அவற்றையும் கட்டுப்படுத்தும் என்று கூறுகிறது.
அதுமட்டுமல்ல இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்த மருந்துக்கும் இல்லாத அதிக சக்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மருந்தை செலுத்தினால் உடலில் 250-ல் இருந்து 300 மடங்கு எதிர்ப்பு சக்தி உருவாகுவதாக கூறி உள்ளனர்.
இந்த தகவலை சீனாவில் உள்ள ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.