மு/அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு ஈருறுளி கையளித்தல்.
பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் சமூகப் பணி ஊடாக அன்ரி அம்மா குடும்பம், லண்டனைச் சேர்ந்த ராஜா, பிரான்சைச் சேர்ந்த ரவிசங்கர், ஜேர்மனியைச் சேர்ந்த செல்வராஜா மற்றும் ரி.ஆர்.ரி. வானொலி பெண் அறிவிப்பாளர் ஆகிய ஐவரின் நிதி பங்களிப்புடன் வவுனிக்குளம் அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 15 மாணவர்களுக்கு 14.05.2018ம் திகதி அன்று துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.பரராஜாசிங்கம் தலைமையில் நடைபெற்றதுடன் இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராஜா அவர்களும் முன்னாள் கிராம சேவையாளர்கள் திரு நவரட்னம் மற்றும் சண்முகநாதன் ஆகியோரும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பகிரவும்...