மு‌‌ட்டா‌ள் காத‌லி

காதல‌ன் : உ‌ன்ன அழகா பட‌ச்ச இறைவ‌ன் அதே சமய‌ம் மு‌ட்டாளாவு‌ம் படை‌ச்‌சி‌ட்டானே…

காத‌லி : ஆமா‌ம்.. ‌நீ‌ங்க சொ‌ல்றது உ‌ண்மைதா‌ன்.

காதல‌ன் : ‌நீயே அத ஒ‌த்து‌க்‌‌ கொ‌ள்‌கிறாயா?

காத‌லி : ஆமா‌ம், நா‌ன் அழகா இரு‌ந்ததால தா‌ன் ‌‌நீ‌ங்க எ‌ன்ன காத‌லி‌ச்‌‌சீ‌ங்க.. நா‌ன் மு‌ட்டாள இரு‌ந்ததாலதா‌ன் உ‌ங்கள நா‌ன் காத‌லி‌ச்சே‌ன்.

***************************************

‌திருமண நா‌ள்

நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து ஒருவ‌ர் பேசிக்கொண்டிருந்தார்.

நண்பர் கேட்டார்… 25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?

என் மனைவியை அந்தமான் தீவிற்கு அழைத்துப் போனேன்.

வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?

அவளைத் திரும்ப அழைத்து வருவது ப‌ற்‌றி‌த்தா‌ன் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
**************************************************

க‌ஞ்ச‌க் காதல‌ன்

காதலன்: நீலக் கடல் எவ்வளவு அழகா இருக்கு பார்த்தியா கண்ணே…

காத‌லி : ‌தினமு‌ம் இ‌ந்த ‌நீல‌க்கடல‌‌த்தானே‌க் கா‌ண்‌பி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌க்‌கீ‌ங்க.. ஒரு நாளைக்காவது நிலக்கடலையை காட்டக்கூடாதா… கண்ணாளா!
*********************************************

காவ‌ல்‌நிலைய‌ம்

சார், என்னோட பொண்ணைக் காலையில் இருந்து காணல! புகார் கொடு‌க்கணு‌ம்..

அதோ போறாரே.. அவ‌ர்தா‌ன் ‌உ‌ங்க ச‌ம்ப‌ந்‌தியா இரு‌க்கணு‌ம்.. முத‌ல்ல அவ‌ர்‌கி‌ட்ட போ‌ய் பேசு‌ங்க…

எ‌ன்ன சா‌ர் ‌நீ‌ங்க.. பொ‌ண்ண‌க் காணலை‌ன்னு சொ‌ல்றே‌ன்.. ‌நீ‌ங்க எ‌ன்னடா‌ன்னா அவ‌ர் ‌கி‌ட்ட பேச‌ச் சொ‌ல்‌றீ‌ங்க?

அவரோட பைய‌ன‌க் காணோ‌ம்னு இ‌ப்போ‌த்தா‌ன் புகா‌ர் கொடு‌த்து‌ட்டு போறாரு.. அதா‌ன்.

***************************************************

கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..

கணவன் : ?!?!?!

*********************************************
மனை‌வி : எ‌ன்ன‌ங்க இ‌ப்படியே நா‌ன் உ‌ங்களு‌க்கு ‌தினமு‌ம் சம‌ச்‌சி‌ப் போ‌ட்டு‌க்‌கி‌ட்டு இரு‌ந்தா என‌க்கு எ‌ன்னதா‌ன் ‌கிடை‌க்க‌ப் போகுது சொ‌ல்லு‌ங்க…

கணவ‌ன் : இ‌ப்படியே சம‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌ந்தா ‌கூடிய ‌சீ‌க்‌கிர‌ம் எ‌ன்னோட எ‌ல்ஐ‌சி பண‌ம் உன‌க்கு ‌கிடை‌ச்‌சிடு‌ம்.

***********************************************

ப‌க்க‌த்து‌வீ‌ட்டு‌க்கார‌ர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?

‌வீ‌ட்டு‌க்கார‌ர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்

 






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !