முள்ளி வாய்க்காலை நோக்கிப் புறப்பட்ட தீப ஊர்தி!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை பறைசாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீப ஊர்தி இன்று (புதன்கிழமை) முள்ளிவாய்க்காலை நோக்கிப் புறப்பட்டது.

வல்வெட்டித்துறையில் இருந்து நேற்று நல்லூரை வந்தடைந்த குறித்த ஊர்திக்கு வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலர் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் வட.மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சின் ஊடகப் பேச்சாளர் துளசி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இளைஞர்களால் ஒழுங்கமைத்து நடத்தப்படும் தீப ஊர்திப் பவனி வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடைவதுடன், தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த மக்களின் நினைவாக இந்த ஊர்திக்கு அஞ்சலி செலுத்துமாறு தாயக மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !