முள்ளிவாய்க்காலில் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தலாம் – நீதிமன்றம் தீர்ப்பு
முள்ளிவாய்க்காலில் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியுமென முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் உலகெங்கிலும் நாளை செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதற்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட நிலையில் குறித்த தடை உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த நகர்தல் பத்திரம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.