முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது
முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது.
இந்த நிகழ்வுகள் இன்று காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் கப்பலடியில் ஆரம்பித்தன.
சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தநிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் புவனேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர் என எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
முள்ளிவாய்கால் நினைவு வாரம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12 திகதி முதல் மே மாதம் 18ஆம் திகதிவரையில் அனுஷ்டிக்கப்படுகிறது.