முல்லைப் பெரியாறு விவகாரம்: தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு மனுத் தாக்கல்!

முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணையைக் கட்ட முயற்சி செய்து வருவதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாக, உச்ச நீதிமன்றமே கூறியதன் பின்பும், புதிய அணையைக் கட்ட முயற்சிப்பது நீதிமன்ற அவமதிப்பு என, தமிழக அரசு தன் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக இருப்பதாக கூறியும், புதிய அணைக் கட்ட அனுமதி தரவேண்டும் என்று கோரியும், ரசூல் ராய் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்த கேரள அரசு, அணை பலவீனமான இருப்பது உண்மையே என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.

முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக நீதிமன்றம் அறிவித்ததன் பின்னரும், கேரள அரசு இவ்வாறு பதிலளித்திருப்பது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும், தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !