முல்லைத்தீவு வன்னி விளாங்குளம் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட வன்னிவிளாங்குளம்  பகுதியில்  தெரிவுசெய்யப்பட்ட 45  பாடசாலைமாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள்  17.01.2019 அன்று
மு/வன்னிவிளாங்குளம் பாடசாலையின் மண்டப கட்டிடத்தில் வைத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில்  பாடசாலை அதிபர்  திரு  ஜெயமோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை பிரானஸ் நாட்டைச் சேர்ந்த திருமதி அன்ரியம்மா குடும்பத்தினர் TRT வானொலியின் சமூகப்பணியின் ஊடாக பெரும்தொகை நிதியுதவிபுாிந்த
அன்ரியம்மா குடும்பத்தினருக்கும்,ரீ.ஆா்.ரி வானெலிக்கும் அனைவரும் நன்றியை தொிவித்துக் கொண்டனா்.

 


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !