முல்லைத்தீவு முள்ளியவளை வடக்கு பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 107 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள். 17.01.2019 அன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் முள்ளியவளை வடக்கு பொதுநோக்கு மண்டப கட்டிடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் றேகன்,கரைத்துறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் அமலன், லண்டனை சேர்ந்த கட்சி உறுப்பினர் பரமேஸ், கிளிநொச்சி மாவட்டத்தின் கட்சி உறுப்பினர் குகன்,இப் பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர்,மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை  TRT வானொலியின் சமூகப் பணி வழங்கியிருந்தமை  குறிப்பிடத்தக்கதாகும்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !