முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கரிசனை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வடக்கிற்கான விஜயத்தின் போது, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களது பிரச்சினை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார்.

முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களது 8 வாடிகளுக்கு இன்று(செவ்வாய்கிழமை) தீவைக்கப்பட்ட நிலையில், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பில் இன்றைய தினம் அமைச்சர் மனோ கணேசனினால், அமைச்சரவையின் அவதானத்துக்கு கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி இந்த உறுமொழியை வழங்கியதாக அவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வட பிராந்திய பொலிஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !