முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது.
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாக புதிய தலைவர்களை தெரிவு செய்ய அமைதியான முறையில் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் . வாக்களிக்க தகுதிபெற்ற 86,869 பேர் இன்றையதினம் வாக்களிக்க
இருக்கின்றனர். அத்தோடு இந்த தேர்தல் பணிக்காக சுமார் 1,500 மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள், 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஈடுபட்டிருக்கின்றதுடன் தேர்தல் கடமையில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
பகிரவும்...