முறையான பிரெக்ஸிற்றையே விரும்புகிறோம்: ஜேர்மன்

முறையான பிரெக்ஸிற்றையே தாம் விரும்புவதாகவும், இந்நிலையில், பிரித்தானிய நாடாளுமன்றமே இது தொடர்பாக தீர்மானிக்க வேண்டியுள்ளதாகவும் ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

பெல்ஜிய பிரதமர் சார்ள்ஸ் மைக்கலுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) கூட்டாக ஊடகவிலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நமக்கு சிறந்த ஒத்துழைப்பு அவசியம். பிரித்தானியாவிலிருந்து முறையான வெளியேற்றத்தையே நாம் விரும்புகிறோம். எனவே, இது தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவின் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு அவற்றுக்கான பதில்களை தேடும் வகையில் தெளிவான நீண்ட கால திட்டங்களை 27 உறுப்பு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஜுன் க்ளூட் ஜுங்கர் மற்றும் மைக்கல் பார்னியர் வெளியிட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !