மும்மொழி இணையத்தளமொன்றின் அலுவலகத்தில் சிறப்பு தேடுதல்
நுகேகொடை, கங்கொடவில பகுதியில் அமைந்துள்ள மும்மொழி செய்தி இணையத்தளமொன்றின் அலுவலகத்தில் பொலிஸார் விஷேட தேடுதல்களை நடத்தியுள்ளனர்.
நேற்று காலை 9.00 மணி அளவில், மிரிஹான பொலிஸார் என தம்மை அடையாளப் படுத்திகிகொண்ட சுமார் 10 பேர் கொன்ட குழுவினர் இந்த சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக குறித்த செய்தி இணையத்தளத்தின் கணிணிகளில் உள்ள ஆவணங்கள் தொடர்பில் தேடுதலில் அவர்கள் பிரதான கவனம் செலுத்தியிருந்ததாக அறிய முடிகின்றது.
எவ்வறாயினும் குறித்த தேடுதல்கலின் போது சந்தேகத்துக்கு இடமான எந்த ஆவணங்களும் பொலிஸாரால் மீட்க்கப்படவில்லை என அறிய முடிவதுடன் எவரும் இதன்போது கைது செய்யப்படவில்லை.
இந் நிலையில் நேற்றைய தினம் யூரியூப் தொலைக்காட்சி அலைவரிசையின் செய்தி வாசிப்பாளர் ஒருவரிடம் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக சி.ஐ.டி.யினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் செய்திகளை வெளியிடும் ஒரு சமயம், அதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் புகைப்படம் ஒன்றினை காட்சிப் படுத்தியதை மையப்டுத்தி இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. விசாரணைகளை தொடர்ந்து குறித்த செய்தி வாசிப்பாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பகிரவும்...