மும்பை கோர தாக்குதலின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!
மஹராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடத்தப்பட்ட கோர தாக்குதலின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலின் 11ம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் மும்பை தாக்குதலின் 11ம் ஆண்டு நினைவை முன்னிட்டு மும்பையில் உள்ள பொலிஸ் நினைவிடத்தில் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
மஹராஷ்டிர மாநிலம் மும்பையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கியமான 8 இடங்களில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்கள் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.