மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து – ஐந்து பேர் உயிரிழப்பு

மும்பையின் மிகப்பெரும் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான செம்பூரில் உயர் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 35 மாடிக் கட்டடத்தின் 11ஆவது மாடியில் நேற்று மாலை இந்ததீவிபத்து ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயில் சிக்கிய ஐந்து வயோதிபர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் அவர்கள வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூச்சுத்திணறல் பாதிப்புக்குள்ளான ஒருவரும் தீயணைப்புபடை வீரர் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !