முன்னாள் மக்களவை சபாநாயகர் காலமானார்

முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, இன்று (திங்கட்கிழமை) காலை காலமானார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், காலை 8.15 மணியளவில் உயிரிழந்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல், 2009 ஆம் ஆண்டு காலம் வரை சபாநாயகராக பதவி வகித்த இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் ஆவார்.

கடந்த காலத்தில் 10 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த இவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆகியோர் தமது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !