முத்தலாக் விவகாரம் ஆண், பெண் சமத்துவம் தொடர்பானது – மோடி

முத்தலாக் விவகாரம் ஆண், பெண் சமத்துவம் தொடர்பானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு இன்று(செவ்வாய்கிழமை) வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது முத்தலாக் சட்டம் தொடர்பாக கூறிகையில் ‘‘முத்தலாக் விவகாரத்தை பொறுத்தவரை கடந்த தேர்தலின் எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

அது ஆண் – பெண் சமத்துவம் தொடர்பானது. முஸ்லிம் நாடுகளில் இது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தான் இதில் மத விவகாரம் இல்லை என கூறுகிறோம். இந்த விவகாரத்தில் சட்டரீதியான தீர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்’’ என குறிப்பிட்டார்.

சபரிமலை தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர் ‘‘நமது நாட்டில் எத்தனையோ கோயில்களில் வேறுபட்ட மரபுகள் பின்பற்றப்படுகின்றன. ஆண்கள் செல்ல முடியாத கோயில்களும் உள்ளன அல்லது செல்லாத கோயில்களும் உள்ளன.

இந்த விவகாரத்தில் மாறுபட்ட தீர்ப்பளித்த பெண் நீதிபதி இதனை தெளிவுபடுத்தியுள்ளார். இது கோயில் பாரம்பரியம் சார்ந்தது என நீதிபதி விளக்கியுள்ளார். எங்கள் நிலைப்பாடு இது தான்’’ என கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !