முதல் வெற்றி யாருக்கு? உலகின் முதல்நிலை அணியுடன் மோதும் இங்கிலாந்து!
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
இப்போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 10.30மணிக்கு சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும், அவுஸ்ரேலியா அணிக்கு ஆரோன் பின்ஞ்சும் தலைமை தாங்குகின்றனர்.
இவ்விரு அணிகளும் இதுவரை 16 ரி-20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9இல் அவுஸ்ரேலியாவும், 6இல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லை.
முன்னதாக சொந்த மண்ணில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் முதல் போட்டி மழைக் காரணமாக இரத்து செய்யப்பட்ட, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
உலகின் முதல் நிலை அணியான அவுஸ்ரேலியா அணியிலும், இங்கிலாந்து அணியிலும் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவான வீரர்கள் உள்ளனர். ஆகவே போட்டியின் வெற்றியாளரை கணிப்பது மிகக் கடினம். எனவே போட்டியின் முடிவினை பொறுத்திருந்து பார்ப்போம்.