முதல் ஒருநாள் போட்டி – இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டி தொடர் கவுகாத்தியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இரு அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி கவுகாத்தியில் இன்று தொடங்குகிறது.
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமநிலையில் உள்ளது. ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, டோனி, ரி‌ஷப் பண்ட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர்.
பந்துவீச்சிலும் முகமது சமி, குல்தீப் யாதவ், சாகல், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், கலீல் அகமது ஆகியோர் உள்ளனர்.
இந்தியா வலிமையாக உள்ளதால் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சாமுவேல்ஸ், ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால் ஹேம்ராஜ், எவின் லீவிஸ், பாலெஸ் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர். பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர், கேமர் ரோச், ஜோசப், பிஷூ, ஆஸ்லேநர்ஸ், தாமஸ் ஆகியோர் உள்ளனர்.
வெஸ்ட்இண்டீஸ் அணியை குறைத்து மதித்துவிட முடியாது. எனவே, இந்தியா எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியம். இப்போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், டோனி, ரி‌ஷப் பண்ட், மனீஷ் பாண்டே, குல்தீப் யாதவ், சாதல், முகமது சமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, கலீல் அகமது.
வெஸ்ட்இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், சாமுவேல்ஸ், லீவீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால், ஹேம்ராஜ், ஆலன், பிஷூ, ஜோசப், நர்ஸ், கீமோபவுல், ரோவன் பாடுவல், கேமர் ரோச், தாமஸ்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !