முதல்வர் சந்திரபாபுவின் போராட்டத்தில் மாற்றுத்திறனாளி தற்கொலை !

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தர்ம போராட்ட தீக்ஷா’ என்ற பெயரில் டெல்லியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று (திங்கட்கிழமை) ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த போராட்டத்தில் பங்குப்பற்றிய மாற்றுத்திறனாளியான தவல அர்ஜுன் ராவ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், தெலுங்கில் எழுதப்பட்ட தற்கொலை கடிதம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இரண்டு பக்கங்களை உள்ளடக்கிய குறித்த கடிதத்தில் தான் இவ்வாறான முடிவை எடுப்பதற்கு நிதி நெருக்கடியே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !