முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் டேனியல் கொலின்ஸ்

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுப் போட்டிகள் மெல்பேர்னில் நடைபெற்று வருகின்றன.

இதில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் ஏஞ்சலி கேர்பர் அதிர்ச்சி தோல்வியடைந்து காலிறுதி வாய்ப்பினை இழந்தார்.

அந்தவகையில், தரவைரிசையல் 35 ஆவது நிலையிலுள்ள அமெரிக்க வீராங்கனை டேனியல் கொலின்ஸ் (Danielle Collins) ஏஞ்சலி கேர்பரை வீழ்த்தி காலியுறுதிக்கு முன்னேறினார்.

இப்போட்டியில், டேனியல் கொலின்ஸ் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலியுறுதிக்கு முன்னேறினார்.

டேனியல் கொலின்ஸ் கிராண்டஸ்லாம் போட்டித் தொடரில், காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !