முதலில் வந்தது கோழியா…? முட்டையா..? பல ஆண்டு கால புதிருக்கு விடை தேடி கொடுத்த விஞ்ஞானிகள்
உலகில் முதலில் வந்த கோழியா அல்லது முட்டையா… சிறுவயதில் இருந்தே நாம் ஒருவருக்கொருவர் வேடிக்கையாக கேட்டுக்கொண்ட கேள்விதான் இது. சில சமயங்களில் நமக்குள் எழும் இதுபோன்ற இயல்பான கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய கேள்விகளில் ஒன்றுதான் இது. பல ஆண்டுகளாக மக்களிடையே ஏற்பட்டு வரும் குழப்பனா கேள்வி. நம்மில் பலருக்கு மணிக்கணக்கில் விவாதம் செய்தும் பதில் கிடைக்கவில்லை. எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா என்ற இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் எனக்கு தெரியாது என்னும் வகையில் ஏதாவது பதில் சொல்லி சமாளித்து விடுவார்கள். நமக்கே இந்த குழப்பம் நீடித்து வந்த நிலையில் அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள், விஞ்ஞானிகளுக்கு இந்த குழப்பம் இருக்காதா என்ன? தற்போது அதற்கு விடை காண முயன்று வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள். ஏற்கனவே லண்டனின் ஷெபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் கோழி மற்றும் முட்டை பற்றிய இந்த கேள்வியை ஆழமாக ஆராய்ந்தனர். இந்த ஆய்வின் படி உலகில் முதலில் வந்தது முட்டை அல்ல கோழிதான் என்று கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கேள்விக்கான காரணத்தை அவர்கள் கூறியுள்ளனர். விஞ்ஞானிகள் இது குறித்து கூறுகையில், ஓவோக்லிடின் என்ற புரதம் கோழி முட்டையின் ஓட்டில் காணப்படுகிறது. இந்த புரதம் இல்லாமல் முட்டைகளை உற்பத்தி செய்ய முடியாது. இது மட்டுமின்றி, கோழியின் கருப்பையில் மட்டுமே இந்த புரதம் உற்பத்தியாகிறது. இந்த வகையில் கோழிதான் உலகிலேயே முதலில் வந்திருக்கும். ஓவோக்லிடின் கோழியின் கருப்பையில் தயாரிக்கப்படும் ஒரு புரதம். பின்னர் இந்த புரதம் முட்டையின் ஓட்டை அடைகிறது என கூறியுள்ளனர். விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு மற்றும் ஆராய்ச்சியில் உலகில் முட்டைக்கு முன் கோழி வந்தது என்று தெரிய வந்தது. செல்லின் மூலக்கூறு அமைப்பைப் பார்க்க, ஹெக்டோஆர் எனப்படும் ஹைடெக் கணினியை விஞ்ஞானிகள் குழு பயன்படுத்தியது. கோழியின் உடலில் உள்ள கால்சியம் கார்பனேட்டை கால்சைட் படிகங்களாக மாற்றுவதைத் தொடங்கி, ஓ.சி.-17 ஒரு வினையூக்கியாக செயல்படுவதை அவர்கள் கண்டுபிடித்தனர். இவைதான் குஞ்சு வளரும் போது மஞ்சள் கரு மற்றும் அதன் பாதுகாப்பு திரவங்களை வைத்திருக்கும் கடினமான செல் ஆகும். இந்த சூழ்நிலையில் தற்போது லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் பிரிஸ்டல் ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகளாக நம்மைத் குழப்பிய இந்தக் கேள்விக்கான விடை கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த முடிவு 51 புதைபடிவ இனங்கள் மற்றும் 29 உயிரினங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது, அவை முட்டையிடும் உயிரினங்கள் அல்லது விவிபாரஸ் (குட்டி போடும் உயிரினங்கள்) என வகைப்படுத்தலாம். முட்டையிடும் உயிரினங்கள் கடினமான அல்லது மென்மையான ஓடுகள் கொண்ட முட்டைகளை இடுவதற்குப் பெயர் பெற்றவை என்றாலும், விவிபாரஸ் இனங்கள் குட்டிகளாகவே பிறக்கின்றன. இது இரண்டும் சேர்ந்த கலவைப்போல, அம்னியோட்கள் எனும் முட்டை இடகூடிய முதுகெலும்பு கொண்ட உயிரிங்கள் உயிர்வாழ்வதற்கு கடினமான ஓடுகள் கொண்ட முட்டைகள் முக்கியமானவை என்று தற்போதுள்ள கண்டுபிடிப்பை கேள்விக் குள்ளாக்குகிறது. பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி, இப்போது இருக்கும் ஊர்வன, பரப்பன மற்றும் பாலூட்டிகளின் ஆரம்பகால மூதாதையர்கள் முட்டையிடுவதற்குப் பதிலாக குட்டிகளைப் பெற்றெடுத்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் எர்த் சயின்சஸ் பேராசிரியர் மைக்கில் பெண்டன் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சியானது, 51 வகையான கடினமான மற்றும் மென்மையான முட்டை அடுக்குகள் மற்றும் 29 உயிரினங்களின் புதைபடிவங்களை ஆய்வு செய்தது. ஆய்வின்படி, பாலூட்டிகள், லெபிடோசவுரியா (பல்லிகள் மற்றும் பிற ஊர்வன) மற்றும் ஆர்க்கோசௌரியா (டைனோசர்கள், முதலைகள், பறவைகள்) உட்பட அம்னியோட்டாவின் அனைத்து வகுப்புகளும் விவிபாரஸ் மற்றும் அவற்றின் உடலில் கருவைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. கடின ஓடு கொண்ட முட்டையானது பெரும்பாலும் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான படியாகும் மற்றும் இறுதியில் கருவைப் பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. குட்டிகளை ஈன்று கொண்டிருந்த சில விலங்குகள் பரிணாம வளர்ச்சியில், முட்டைகளை போடும் உயிரினங்களாக பல மில்லியன் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. எனவே, முதலில் கோழி வரவில்லை, முட்டை தான் வந்துள்ளது. முதலில் குட்டிகளை போட்டுக்கொண்டிருந்த கோழியின் மூதாதைய உயிரினம் பரிணாம வளர்ச்சியில் முட்டை போடும் கோழைகளாக மாறின. அவை இப்போது முட்டை போட்டு குஞ்சு பொரிக்கின்றன. முதலில் மென்மையாக இருந்த முட்டை ஓடுகள் பரிணாம வளர்ச்சியில் கடினமான ஓடுகளாக மாறியுள்ளன என்கின்றனர் விஞ்ஞானிகள்…அது சரி…முட்டைதான் முதலில் வந்தது என நிரூபணமாகிவிட்டது…கோழி உலகில் உருவானது எப்படி? ….சினிமாப்பட 2-ம் பாகம் போல அடுத்த விவாதத்துக்கு தயாராவோமா….