முதலாவது ஆண்டு நினைவுதினம் – அமரர். கந்தையா யோகநாதன் (15/04/2023)
தாயகத்தில் பூநகரியை பிறப்பிடமாகவும், உகண்டாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.கந்தையா யோகநாதன் அவர்களுடைய 14 ஆம் திகதி ஏப்ரல் மாதம் வெள்ளிக்கிழமை அன்று வந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தை 15ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்.
ஓராண்டு நினைவுகளோடு அன்பு தம்பி அமரர் கந்தையா யோகநாதன் அவர்களுடைய ஆத்மா சாந்திக்காக
பிரார்த்திக்கும் அன்பு அக்கா கு.யோகேஸ்வரி அவர்களின் உருக்கமான கவிதை,
அன்பின் திருவுருவம்
அகலக்கால் பதிக்காத தனி வடிவம்..!
தமிழ் வாழவேண்டும் என்ற சொல் வடிவம்..!
தமிழ் ஈழத்தை நேசித்த மன வடிவம்,
புலம்பெயர்ந்து வாழ்ந்தும் புனிதராய் வாழ்ந்த உடைவடிவம்..!
மனம் தளர்ந்து போகாது, சினம் கொண்டு பேசாது,
வந்தாரை வரவேற்கும் குணவடிவம்..!
குடும்பத்தின் வழிகாட்டி..!
குதூகலத்தின் ஒளிஊட்டி..!
அன்பை வளர்த்தவன்,
அதிகம் பேச விரும்பாதவன்..!
உண்மைகளை உரைத்தவன்,
உறவுகளை வாழவைத்தவன்..!
எம் நெஞ்சத்தில் நிறைந்தவன்,
நெடுங்கலாம் வாழவேண்டியவன்.
காலத்தின் கட்டளையில் பிரிவை தந்தவன்.
கண்ணீரை சிந்த வைத்து விடையும் பெற்றவன்.
இறைவனின் பாதத்தில் இளைப்பாறுகின்றவன்.
பெருந்துயர் மனதோடு பிரிவின் துயர் கண்ணீரோடு,
உன் பிரிவு ஓராண்டோடு
உன் ஆத்ம சாந்திக்கும் மலர் தூவி,
என் மனதில் உள்ளதை நான் எழுதி,
என் ஆயுள் உள்ள வரை உன் அன்பை நான் தழுவி,
வாழ்வேன் தம்பி.. வாழ்வேன்.
நான் வாழும் காலம் வரை உன் ஆன்மா சாந்திக்காய் மலர் தூவி நான் வாழ்வேன்.
இறைவனடியில் இளைப்பாறு!
எண்ணப்படி ஒரு நாள் எம் ஈழம் விடியும் என்ற நினைவோடு..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
வலிகளை சுமந்த மனதோடு சகோதரி அக்கா
குணராஜா யோகேஸ்வரி
அமரர் கந்தையா யோகநாதன் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அன்னாரின் ஆத்மா சாந்திக்காக TRT தமிழ் ஒலி குடும்பமும், அன்பு நேயர்களும் பிரார்த்திக்கின்றோம்.
இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு அக்கா குணராஜா யோகேஸ்வரி குடும்பம்.
அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.
பகிரவும்...