முதலாம் உலகப்போரில் உயிரிழந்த துருப்புகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அஞ்சலி

முதலாம் உலகப் போரில் பிரான்ஸிற்காக போராடிய ஆபிரிக்க துருப்புகளை நினைவுகூர்ந்து, கிழக்கு பிரான்ஸில் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மற்றும் மாலி ஜனாதிபதி இப்ராஹிம் பூபக்கர் கெயிட்டா ஆகியோர் மலர்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.

‘கறுப்பு இராணுவம்’ என பெயரிடப்பட்ட குறித்த துருப்புகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏனைய ஆபிரிக்க நாடுகளின் தூதுவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

பிரான்ஸ் காலனித்துவத்தைச் சேர்ந்த இலட்சக்கணக்கான துருப்புகள் முதலாம் உலகமகா யுத்தத்தில் பணியாற்றிய அதேவேளை, 1918ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரெயிம்ஸ் பகுதியில் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டனர்.

குறித்த வீரர்களுக்கான நினைவுச்சின்னங்கள் கடந்த 1924ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டபோதும், 1940ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜேர்மன் ஆக்கிரமிப்பின்போது அவை அழிக்கப்பட்டன.

இதேவேளை, பிரான்ஸிற்காக போராடிய ஆபிரிக்க இராணுவ துருப்புக்கள், பிரான்ஸின் வரலாற்றை இரத்தத்தால் எழுதியுள்ளனர் என பிரபல எழுத்தாளர் அலைன் மபன்கோவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !