முதலாம் ஆண்டு நினைவுநாள் – திருமதி மார்கிரேட் தெரேசா அமுதராணி யோசப் (ராணி) 21/10/2021
தாயகத்தில் யாழ்ப்பாணம் மார்ட்டின் ரோட்டை பிறப்பிடமாகவும், France இல் வாழ்ந்தவருமான திருமதி மார்கிரேட் தெரேசா அமுதராணி யோசப் (ராணி) அம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினம் அக்டோபர் மாதம் 21ம் திகதி வியாழக்கிழமை
இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்றைய தினம் முதலாம் ஆண்டில் நினைவு கூரப்படும் திருமதி மார்கிரேட் தெரேசா அமுதராணி யோசப் (ராணி) அம்மா அவர்களை நினைவு கூருபவர்கள் அன்பு பிள்ளைகள் அன்ரன் புலேந்திரராஜா, ரஞ்சன் கிருபராசா, நகுலன் தேவராசா, கொன்ஸ்ரன்ரின் சகாயன், சந்திரா தேவதாசன், ஜெசி செல்வநாயகம், நவஜோதி கிரிஸ்ரி, மருமக்கள் பிலோமினா, டெல்சி, லில்லி, மலர், கிறிஸ்ரி, பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ்வேளையில் அம்மாவின் ஆன்மா நித்திய இளைப்பாற்றி அடைய பிரார்த்திக்கின்றார்கள்.
இன்று முதலாவது ஆண்டு நினைவு நாளில் நினைவு கூரப்படும் அமரர் திருமதி மார்கிரேட் தெரேசா அமுதராணி யோசப் (ராணி) அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள், அன்பு நேயர்கள அனைவரும் நினைவு கூருகிறார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வான் அலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு மகன், மருமகள் அன்ரன் பிலோமினா.
அவர்களுக்கும் எமது நன்றிகள்.
கண்ணும் கருத்துமாய் எம்மை காத்தவளே
அன்பு பாசம் அரவணப்பு தந்தவளே
பிறரையும் உன் பிள்ளையைப்போல் அரவணைத்தவளே
எல்லோருக்கும் அள்ளி கொடுத்தவளே,
ஆண்டுகள் ஒன்றானாலும் உங்கள் நினைவுகள் நெஞ்சில்..அம்மா
உங்கள் பிரிவால் வாடி நிற்கின்றோம் அம்மா.
சாந்தி சாந்தி சாந்தி!