முதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.பொன்னம்பலம் ஜெகநாதன் (சுவிஸ் Asian Shop உரிமையாளர்) 13/08/2016

தாயகத்தில் குப்பிளான் கற்கரை பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகக் கொண்டவரும் சுவிஸ் lausanne ஐ  வதிவிடமாக கொண்டிருந்தவருமான அமரர்.பொன்னம்பலம் ஜெகநாதன் (Asian Shop உரிமையாளர் ) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 13ம் திகதி ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை இன்று அனுஷ்ட்டிக்கப் படுகிறது.
அன்னாரை நினைவு கூருபவர்கள் :
அன்பு மனைவி, பிள்ளைகள்,சகோதரர்கள் ,சகோதரிகள்,மச்சான்மார்,மச்சாள்மார், தம்பிமார், தங்கைமார்,பெறா மக்கள் , மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்.

 

 

 

 

 

கண்ணில் அழுகை ஓயவில்லை – எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை,
விழிகள் உன்னை தேடுகையில்
விழி நீர் ஆறாய் ஓடுதய்யா!

பெற்றவர் உற்றவர் பெருமை கொள்ள
பேரொளியாய் ஒளிர்ந்தாய் நீ – அன்று
உற்றவரை நேசித்து உயர்வாய் வாழ்ந்தாயே!
பெற்றெடுத்த செல்வங்களில்
பேரன்பை ஊட்டி விட்டு – ஜெயா இன்றெம்மை
தத்தளிக்க விட்டு விட்டு
தடம் மாறிப் பறந்து விட்டாய்!

பிள்ளைகள் தேடுகின்றார் அப்பா எங்கே என,
நிலையற்ற இவ் வாழ்வில் நிலையான
சோதி பெறா ஒளியில் சொல்லாமல் சென்றதென்ன?

வாழ்வை வென்று விட்டேனென்று
வானம் நீ சென்று விட்டாய் !
ஏங்கித் தவித்து இன்று
ஓராண்டை முடித்து விட்டோம்!
நித்தமும் எம் நினைவில் நின்று கொண்டு
நிஜத்தில் இறைவனுடன் கலந்திட்ட உங்கள்
ஆத்மா சாந்தி அடைய எம் கண்ணீரை மலர்களாய்
காணிக்கையாக்கி பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலியில் தமிழ் ஒலி குடும்பமும் பங்கு கொண்டு ஆத்ம சாந்தி வேண்டி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்!

இன்றைய இந் நிகழ்வை வானலைக்கு எடுத்து வருகிறார்கள்:
சுவிஸ் ஏசியன் ஷொப் ஊழியர்கள்

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

Casket-bouquet-1-LARGE (1)(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !