முட்டை போடும் 14 வயது சிறுவன்; இந்தோனேசியாவில் அதிசயம்!

இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவன் இரண்டு ஆண்டுகளாக 20 முட்டை போட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் குவா பகுதியைச் சேர்ந்தவர் அக்மல், வயது 14. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் முட்டையிட்டு வருகிறாராம்.

அவரது தந்தை கூறுகையில்,

இந்த பிரச்னைக்காக நாங்கள் பலமுறை மருத்துவமனைக்கு சென்றுள்ளோம். மருத்துவமனைக்கு வந்த பின் கூட இரண்டு முட்டைகள் போட்டுள்ளார். முட்டையை உடைத்து பார்த்த போது மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்றார்.

ஆனால் மருத்துவர்களோ மனிதன் முட்டை போடுவதற்கு வாய்ப்பே இல்லை, மருத்துவமனையில் முட்டை போட்டதை யாரும் நேரடியாக பார்க்கவில்லை. மாணவனை முழுமையாக பரிசோதித்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !