Main Menu

“முட்டாள் தினம்”

உலகெங்கும் இன்று
ஏபரல் முதலாம் திகதியை
முட்டாள் தினமாக கொண்டாடி மகிழ
ஜேர்மனி நாட்டைக் கட்டியெழுப்பிய
பிஸ்மார்க் பிறந்த நாளாம் இன்று
ஏப்ரல் முதலாம் நாளை
அறிவாளி தினமாய்
அறிவித்து மகிழ்கிறது ஜேர்மனி !

ஏமாற்றுவதையும் ஏமாறுவதையும்
ஏற்றுக் கொள்ளும் ஓர் தினமே
முட்டாள்கள் தினமாச்சு
முழுமதியாய் உருவாச்சு
முழு உலகிலும் பிரபல்யம் ஆச்சு !

பொய் ஒன்றை உண்மையென நம்பி
ஏமாறி முட்டாளாவதும்
பொய் ஒன்றை உண்மையாக்கி
இன்னொருவரை முட்டாளாக்குவதும்
முட்டாள் தினமாச்சு !

எவரையும் துன்புறுத்தாமல்
பின்விளைவுகள் ஏதும் நிகழாமல்
பிறரை இரசிக்க வைத்து
மகிழ்ச்சியில் ஆழ்த்தும்
அற்புத நாளே முட்டாள் தினமாம் !

இன்றைய நவீன யுகத்தில்
இணையத் தளங்கள் பத்திரிகைகள்
ஊடகங்கள் போட்டா போட்டியோடு
முட்டாளாக்கி விடுகின்றன மக்களை
திறமையின் தேடல்களை
தேடலின் ஆய்வுகளை
முன்னெடுப்போம் நாமும்
முனைப்போடும் செயற்படுவோம்
முட்டாள் ஆகாமல் !

பகிரவும்...
0Shares