Main Menu

முக கவசம் அணியா விட்டால் 6 மாதம் சிறை

கொரோனா வைரஸ் இந்தியாவில் தன் கோர முகத்தை காட்ட தொடங்கியதால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோக மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதன்படி டெல்லியில் நேற்றுமுன்தினம் முதல் வீட்டில் இருந்து வெளியே வந்தால் முக கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் அவ்வாறு முக கவசம் அணியாமல் யாரும் வெளியே வந்தால் அவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், அபராதமாக 200 ரூபா முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.