முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணைகள் காணொளியாக பதிவு செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றம் வலியுறுத்து!
முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணைகளை காணொலியாக பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 3 மாதத்திற்குள் செய்து தர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரவு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறுவதை தடுக்கும் வகையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களில் விசாரணை நடவடிக்கைகள் காணொலியாக பதிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குற்றவழக்குகளில் விசாரிக்கப்படும் சாட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைப்படி பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதிகள் இதன்போது அறிவுறுத்தியுள்ளனர்.
பகிரவும்...