முகேஷ் அம்பானி மகன் திருமணம் – மும்பையில் குவிந்த பிரபலங்கள்

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
இதையொட்டி, பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள், வெளிநாட்டு பிரமுகர்கள் என முக்கிய விருந்தினர்கள் குவிந்துள்ளனர்.
ஐ.நா. சபை முன்னாள் பொது செயலாளர் பான் கி மூன், அவர்து மனைவி யோ சூன் டீக், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அவரது மனைவி செர்ரி பிளேர் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பங்கேற்றனர்.
பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக் கான், அமீர் கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் வருகை தந்தனர்.
இதேபோல், கிரிக்கெட் வீரர்களான சச்சின் தெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி தெண்டுல்கர், இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே உள்பட பலரும் வந்தனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குவிந்தனர்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !