மீண்டும் சிக்கலுக்குள்ளாவதை பிரிட்டன் விரும்பாது : தெரேசா மே

பிரெக்ஸிற் மாற்றுத் திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை சம்மதிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள பிரதமர் தெரேசாமே பிரஸ்ஸல்ஸுக்கு விரைந்துள்ளார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடனான இந்தச் சந்திப்பில் வடஅயர்லாந்துக்கும் அயர்லாந்துக்குமிடையிலான சுங்க நடவடிக்கைகளை இலகுவாக்கும் திட்டம் குறித்தும் வலியுறுத்தவுள்ளதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் பிரதமர் கொண்டுவந்த பிரெக்ஸிற் ஒப்பந்தம் பாராளுமன்றில் நிராகரிக்கப்பட்டு மாற்றுத் திட்டங்களை நாடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தார்.

அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய தேவை அவருக்கு உருவானது.

எனினும் பிரெக்ஸிற் மாற்றுத் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் ரஸ்க்; ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகும் பிரெக்ஸிற் திட்டத்திற்காக பிரசாரம் செய்தவர்களுக்கு “நரகத்தில் சிறப்பு இடம்” இருப்பதாக தெரிவித்திருந்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !