மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் எயார் பிரான்ஸ் ஊழியர்கள்!

கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக விமான சேவை ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக போராடி வருகின்றனர். முன்னதாக மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள் பணி பகிஷ்கரிப்புக்களை தொடர்ந்து மீண்டும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
எயார் பிரான்ஸ் விமான சேவைகளின் ஊழியர்கள் 6 வீத சம்பள உயர்வு வேண்டும் என கோரி வருகின்றனர். இதற்காக கடந்த பெப்ரவரியில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இம்மாதம் ஏப்ரல் 10, 11 ஆகிய திகதிகளில் மீண்டும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறியமுடிகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் மூன்று தடவைகள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அரசுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையுடன் சம்பளத்தை வருடத்துக்கு 1 வீதத்தால் அதிகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை ஊழியர் தொழிற்சங்கள் நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !