மியன்மார் அகதிகள் குறித்து அரசாங்கம் விளக்கம்

மியன்மாரின் ரொஹிஞ்ஜிய அகதிகள் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மியன்மாரின் ரொஹிஞ்ஜிய அகதிகள் தொடர்பில் முன்னர் அனுசரித்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

அந்நாட்டின் சமகால நிலவரம் தொடர்பில் பல குழுக்கள் பல்வெறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. இவை பற்றி குடிவரவு மற்றும் குடியகல்வுக்குப் பொறுப்பான அமைச்சு விளக்கமளித்துள்ளது.

2008ம் ஆண்டு மார்ச் மாதம் மியன்மாரில் இருந்து தப்பி வந்த 55 ரொஹிஞ்ஜிய முஸ்லிம்களை கடற்படையினர்காப்பாற்றி, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பிடம் ஒப்படைத்திருந்தார்கள். இவர்கள் அனைவரும் 2012ம்ஆண்டு ஜுலை மாதம் நாட்டிலிருந்து வெளியேறியிருந்தார்கள். 2013ம் ஆண்டில் 170 பேர் காப்பாற்றப்பட்டார்கள். இவர்களும் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் ரொஹிஞ்ஜிய முஸ்லிம்கள் 30 பேரை கடற்படை காப்பாற்றியிருந்தது. இவர்கள் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்திடம் ஒப்படைக்கப்பட்டார்கள். இந்த அகதிகள் விவகாரத்தில் அங்கீகரிக்கப்பட்ட சட்ட வரம்புகளுக்கு உட்பட்டவாறு செயற்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !