மின்னல் தாக்குதல்! – 7000 வீடுகளுக்கு மின்தடை! – இருளில் மூழ்கிய தென் மேற்கு பிராந்தியம்

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அடை மழை மற்றும் மோசமான மின்னல் தாக்குதலில் மின் தடை ஏற்பட்டுள்ளது. பிரான்சின் தென்மேற்கு பிராந்தியத்தில் 40,000 வீடுகள் இருளில் மூழ்கியிருந்தன.
இன்று வியாழக்கிழமை நண்பகல் பெற்றுக்கொண்ட தகவலில் படி Dordogne பகுதியில் ஆறாயிரம் வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. Lot-et-Garonne பகுதியில் 1,500 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. நேற்று நள்ளிரவு மொத்தமாக 40,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டிருந்தது. பின்னர் துரிதமாக செயற்பட்டு அந்த எண்ணிக்கை 19,000 ஆக குறைக்கப்பட்டது. தொடர்ந்தும் மின்சார சபை ஊழியர்கள் கடின உழைப்பால் நண்பகலுக்குள் 7,000 வீடுகளாக குறைத்துள்ளனர்.
அதேவளை, இன்று வியாழக்கிழமை மாலை மீண்டும் இப்பிராந்தியங்களில் கன மழை மற்றும் மின்னல் தாக்குதல்கள் தொடரும் என தெரிவிக்கப்பட்டு, இன்று 22 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !