Main Menu

மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்திவள அமைச்சும் நீர் விநியோக சபையும் கோரிக்கை விடுத்துள்ளன.

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிகமானோர் வீடுகளில் தங்கியிருப்பதால் மின்சாரம் மற்றும் நீர் பாவனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொதுமக்கள் நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்தாத பட்சத்தில் எதிர்காலத்தில் அவற்றைத் தடையின்றி விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.