மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் – விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது

இந்தியாவில் தற்போது பல துறைகளை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பல ஆண்கள் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
அவ்வகையில், பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த விடூ இயக்கம் தொடங்கப்பட்டது. டுவிட்டர் மூலம் பிரபலமாகிவரும் இந்த இயக்கத்தில் பெண்களால் ஏமாற்றப்பட்ட பலரும் தங்களது சோக அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
சினிமாத்துறை, கல்வித்துறையில் இதுபோல் பெண்களால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் உள்பட சுமார் 1600 பேர் இங்கு தங்களது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளனர். இதில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வும் தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !