மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி கோட்டாபய ராஜபக்ஷ – அமைச்சர் மங்கள சமரவீர

இந்த நாட்டில் நியமிக்கப்பட்ட மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த காலங்களில் மஹிந்தவும் அவரது சகோதர்களும் நாட்டில் உள்ள அனைத்தையும் கொள்ளையடித்ததுடன், வெள்ளை வான் கலாச்சாரத்தை கொண்டுவந்து ஊடகவியலாளர் பலரின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமாக இருந்தனர் என குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமன்றி முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ பல மோசடிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அவை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கூட அதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை என கூறினார்.

இவ்வாறு மஹிந்தவும் அவரது உறவினர்களும் கொண்டுவந்த வெள்ளை வான் கலாச்சாரத்தின் ஊடாக பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டதால் உலகளாவிய ரீதியில் இருந்து இலங்கை தனிமைப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அன்று பல ஊழல்களில் ஈடுபட்ட அவர்கள் தற்போது உள்ள ஆட்சியாளர்களை ஊழல் செய்வதாக விமர்சித்து வருகின்றமை வேடிக்கையான விடையம் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !