மிகப்பெரும் குழு மோதலைத் தொடர்ந்து RAiD படையினரால் 11 பேர் கைது!

இன்று வெள்ளிக்கிழமை காலை லியோன் 7 ஆம் வட்டாரத்தில்  இடம்பெற்ற மிகப்பெரும் குழு மோதலைத் தொடர்ந்து 11 பேர்களை RAiD படையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முதல்கட்ட தகவல்களில், லியோனின் 7 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு நபர்கள் கலந்துகொண்ட இந்த குழு மோதலில் துப்பாக்கி முழக்கங்கள் கேட்டுள்ளதாக RAiD படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பின்னரே, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து முதல் கட்டமாக கைகளில் துப்பாக்கிகள் வைத்திருந்த மூன்று நபர்களை கைது செய்ததாகவும், அதைத் தொடர்ந்து பின்னர் மேலும் 8 பேர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !